/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாதானுார் அரசு பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா
/
வாதானுார் அரசு பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா
வாதானுார் அரசு பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா
வாதானுார் அரசு பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா
ADDED : ஆக 31, 2024 02:16 AM

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு தினவிழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் வேலவன் வரவேற்றார். தேசிய விளையாட்டு தினம், மேஜர் தியான் சந்த் சிறப்பு குறித்து ஆசிரியர் பாலகுமார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
பள்ளி மாணவர்களிடையே கைபந்து போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பார்வதி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேணு, செந்தமிழ்ச்செல்வி, குமுதா, சசிகலா, பூவிழி, சங்கரி, ஓம்சாந்தி, மலர்க்கொடி, குப்புசாமி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.