/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய மாணவர் படை தொடர் ஓட்டம்
/
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய மாணவர் படை தொடர் ஓட்டம்
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய மாணவர் படை தொடர் ஓட்டம்
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய மாணவர் படை தொடர் ஓட்டம்
ADDED : ஆக 30, 2024 05:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி என்.சி.சி., தலைமை அலுவலகத்தின் சார்பில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தொடர் ஓட்டம் லாஸ்பேட்டையில் நேற்று நடந்தது.
புதுச்சேரி என்.சி.சி., தலைமையக முப்படை தலைமை அதிகாரி கர்னல் மேனன் உத்தரவின்பேரில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தொடர் ஓட்டம் நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை என்.சி.சி., தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்த தொடர் ஓட்டத்தில், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல் கொடியசைத்து தொடங்கி வைத்து, வழிநடத்தினார்.
தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக 6. கி.மீ., துார பயணமாக, மீண்டும் என்.சி.சி., தலைமை அலுவலகம் வந்து நிறைவு செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் உடல் வலிமை மற்றும் மன ஆரோக்கியத்திற்கான பல்வேறு உடற் பயிற்சிகளை மேற்கொண்டனர்.