/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய பயிற்சிப்பட்டறை
/
சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய பயிற்சிப்பட்டறை
சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய பயிற்சிப்பட்டறை
சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய பயிற்சிப்பட்டறை
ADDED : மார் 22, 2024 05:53 AM
புதுச்சேரி : சாரதா கங்காதரன் கல்லுாரியில் பாலியியல் துன்புறுத்தல் தடுப்பு துறை சார்பில், இந்தியாவில் பெண்களின் உரிமைகள் குறித்த ஒரு நாள் தேசிய பயிற்சிப் பட்டறைநடந்தது.
கல்லுாரி துணைத் தலைவர் பழனி ராஜா பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். டில்லி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் பஞ்சநாதன், பெண்கள் உரிமைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.ராஜசேகர், வழக்கறிஞர் மேரி அன்னா தயாவதி ஆகியோர்,ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பேசினர்.
புதுச்சேரிபல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை பேராசிரியர்நளினி குடும்ப வன்முறை, மனித கடத்தல், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.ஜிப்மர் தலைமை மருத்துவ அதிகாரி டயானா ஷர்மிளா நாதன் ஊட்டச்சத்துக்கள், ரத்த சோகை, துாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மகளிர் ஆய்வு மையம் இணை பேராசிரியர் மீனா கோபால், பணியிடத்தில் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது குறித்து பேசினார். பயிற்சி பட்டறையில்மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் உதயசூரியன், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

