/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 24, 2024 05:58 AM

புதுச்சேரி: பேட்டையான்சத்திரம் நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
புதுச்சேரி திலகர் நகர், பேட்டையான்சத்திரம், நவசக்தி விநாயகர், நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவகிரக, கோ பூஜை நடந்தது. மாலையில் முதல் கால யாக பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, மாலையில் மூன்றாம் கால பூஜை நடந்தது.
நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. காலை 8:30 மணிக்கு பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பட்டு கும்பாபிேஷகம் நடந் தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
இன்று 24ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிேஷகம் நடக்கிறது. 48 வது நாள், நவசக்தி விநாயகர், நவசக்தி மாரியம்மன் தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

