/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 11 மையங்களில் 'நீட்' தேர்வு
/
புதுச்சேரியில் 11 மையங்களில் 'நீட்' தேர்வு
ADDED : மே 05, 2024 03:43 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று 11 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று 5ம் தேதி மொத்தம் 557 நகரங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை இத்தேர்வு நடக்க உள்ளது.
மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களில் உள்ள 11 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 5 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.
சீக்கிரம் போங்க...
கடைசி நேர பதட்டத்தை தவிர்க்க தேர்வர்கள், இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்குச் செல்வது நல்லது.
தேர்வு மையத்திற்குள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:29 மணி வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு ஒரு சில நிமிடங்கள் தாமதமாக அதாவது மதியம் 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் சென்றாலும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல்போன், இதர தடை செய்யப்பட்ட எந்தபொருட்களையும் கொண்டு செல்ல வேண்டாம்.
அட்மிட் கார்டு, ஆதார் முக்கியம்
நீட் தேர்விற்கு செல்லும்போது அட்மிட் கார்டுடன் (ஹால்டிக்கெட்), புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையையும் அவசியம் கொண்டு செல்ல வேண்டும். அட்மிட் கார்டு மூன்று பக்கங்களை கொண்டது.
முதல் பக்கத்தில் சுய தகவல்கள் அடங்கிய படிவம், இரண்டாம் பக்கத்தில் போஸ்டு கார்டு சைஸ் போட்டோகிராப், மூன்றாம் பக்கத்தில் முக்கிய அறிவுறுத்தல் அடங்கியுள்ளன.
அட்மிட் கார்டில் உள்ள இந்த மூன்று பக்கங்களையும் டவுன்லோடு செய்து தேர்வுக்கு செல்ல வேண்டும்.
தேர்வறைக்கு வரும்போது இரண்டாம் பக்கத்தில் புகைப்படத்தினை ஒட்டி அவசியம் எடுத்து வர வேண்டும்.