/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' மாதிரி தேர்வு சிறந்த அடித்தளம் ஸ்பெக்ட்ரா மேலாண் இயக்குனர் தகவல்
/
'நீட்' மாதிரி தேர்வு சிறந்த அடித்தளம் ஸ்பெக்ட்ரா மேலாண் இயக்குனர் தகவல்
'நீட்' மாதிரி தேர்வு சிறந்த அடித்தளம் ஸ்பெக்ட்ரா மேலாண் இயக்குனர் தகவல்
'நீட்' மாதிரி தேர்வு சிறந்த அடித்தளம் ஸ்பெக்ட்ரா மேலாண் இயக்குனர் தகவல்
ADDED : ஏப் 29, 2024 04:25 AM

புதுச்சேரி : ''மாணவர்கள் தன்னம் பிக்கையுடன், 'நீட்' தேர்வை அணுக, இந்த மாதிரி தேர்வு, சிறந்த அடித்தளமாக அமைந்துள் ளது,''என, ஸ்பெக்ட்ரா நிறுவனமேலாண் இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தினமலர் நாளிதழுடன் இணைந்து, இரண்டாவது ஆண்டாக, 'நீட்' மாதிரி தேர்வை, வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இந்த மாதிரி தேர்வால், 'நீட்' தேர்வு எழுதும் போது, மாணவர்களுக்கு வரக்கூடிய பயம் முற்றிலும் விலகி விடும்.
இதன் மூலம் மாணவர்கள்தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதக்கூடிய, வாய்ப்பை பெறுகின்றனர்.
கடந்தாண்டு இதேபோல, தினமலர் நாளிதழுடன், ஸ்பெக்ட்ராவும் இணைந்து நடத்திய 'நீட்' மாதிரி தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தான், மாநில அளவிலும் முதல் மதிப்பெண் வாங்கினார். தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்த மாதிரி தேர்வால், ஏராமளமான மாணவர்கள் பலன் பெற்று வருகின்றனர்.
இந்த மாதிரி தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், அவர்களுக்கு இன்றே தெரிந்து விடும்.
அதனால் எந்த பாடத்தில், இன்னும் கூடுதலாக படிக்க வேண்டும் என்கிற, புரிதல் அவர்களுக்கு வந்து விடும். அதைக்கொண்டு, மாணவர்கள் நன்றாக படித்து, தங்களை பலப்படுத்தி கொண்டு, 'நீட்' தேர்வை எழுதலாம். இந்த மாதிரி தேர்வு, அதற்கான சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

