/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண உயர்வை கண்டித்து சமூக அமைப்புகளுடன் நேரு எம்.எல்.ஏ., தர்ணா
/
மின் கட்டண உயர்வை கண்டித்து சமூக அமைப்புகளுடன் நேரு எம்.எல்.ஏ., தர்ணா
மின் கட்டண உயர்வை கண்டித்து சமூக அமைப்புகளுடன் நேரு எம்.எல்.ஏ., தர்ணா
மின் கட்டண உயர்வை கண்டித்து சமூக அமைப்புகளுடன் நேரு எம்.எல்.ஏ., தர்ணா
ADDED : ஆக 29, 2024 07:24 AM

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி நேரு எம்.எல்.ஏ., பொது நல அமைப்பினருடன் மின்துறை அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்தது. இதை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேரு எம்.எல்.ஏ., தலைமையிலான சமூக அமைப்புகள், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்த வந்த கண்காணிப்பு பொறியாளர் சண்முகத்திடம், போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேரு எம்.எல்.ஏ., கூறுகையில்;
கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கண்டித்து பொது நல அமைப்புகள் போராட்டம் நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மின் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத்திலும், மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர், அமைச்சர் தெரிவித்தனர். ஆனால் திடீரென மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மின்தடை இல்லாத நாட்களே இல்லாத நிலையில், மின் கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே செல்வது நியாயம் இல்லை.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்ப பெற வேண்டும் அல்லது மானியமாக வழங்க வேண்டும். தவறினால் பந்த் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.