/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழில் கடை பெயர் பலகைகள் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
தமிழில் கடை பெயர் பலகைகள் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தமிழில் கடை பெயர் பலகைகள் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தமிழில் கடை பெயர் பலகைகள் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : பிப் 28, 2025 04:44 AM
புதுச்சேரி: வியாபார நிறுவனங்களின் பெயர் பலகையில், கட்டாயம் தமிழ் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில், தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து, பிற மொழிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.இதனால், தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள், பிறமொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், தாய் மொழியான தமிழை, மாணவர்கள் கற்க தவறுகின்றனர்.இதனால்,இளைய சமுதாயத்தினரின் எதிர்காலம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவரின் தாய்மொழி தான், அவரின் அடையாளத்தை வடிவமைக்கிறது.
ஒவ்வொரு கல்வி நிறுவனமும், மாணவர்களுக்கு கட்டாயம் தமிழை கற்பிக்க வேண்டும். இதை அரசும், கல்வித்துறையும் கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகளும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, கடைகள்,வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும். இப்படி, தமிழில் பெயர் பலகை வைத்தால் தான், வணிக உரிமங்கள் புதுப்பிக்கப்படும் என, கலெக்டர் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.