/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சிறு சைபர் கிரைம் குற்றங்களை காவல் நிலையத்தில் விசாரிக்க வேண்டும்' நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : ஆக 11, 2024 04:59 AM
புதுச்சேரி : தமிழத்தினை போன்று சிறு சைபர் கிரைம் குற்றங்களை போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
சட்டசபை பூஜ்ய நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு பேசியதாவது:
தமிழகத்தில் பெரிய குற்றங்களை மட்டுமே சைபர்கிரைம் போலீசார் விசாரணைக்கு எடுத்து புலனாய்வு செய்து குற்றவாளிகளை தண்டிக்கிறார்கள்.
சிறு குற்றங்களை அந்தந்த ஊர் காவல் நிலையமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கிறார்கள்.
காரைக்காலிலும் இப்படி தான் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் அப்படி இல்லை. இணையதளத்தில் புகார் கொடுத்தாலும் கோரிமேடு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வெகு தொலைவில் கிராமபுறங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மிக முக்கியமான ஆன்லைன் பண மோசடி மற்றும் பெரிய இணையதள குற்றங்களை மட்டும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க செய்ய வேண்டும். மற்ற சிறு குற்றங்களை அந்தந்த காவல்நிலையங்களில் புகாரை பெற்று புலனாய்வு செய்து குற்றச் செயல் புரிபவர்கள் மேல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களை பிடிக்க செல்லும் காவலர்களுக்கு வாகன வசதி, பயணப்படி மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.
எதிர்காலத்தில் இணையதள குற்றங்களே அதிகமாக இருக்கும் என்பதால் இப்போதே காவல்துறையில் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.