/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 01:21 AM
புதுச்சேரி: கோவில் சொத்துக்களை மீட்பதுடன், சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., பேசினார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், தனி நபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி உயர்வு என கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லுக்கு பிந்தைய மானியம் ஆந்திராவில் ரூ. 16 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் ரூ.5000 கொடுக்கின்றனர். கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது இல்லை. உண்மையான பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்குவது இல்லை. உருளையன்பேட்டை தொகுதியில் 3வது மாடியில் குடியிருக்கும் நபருக்கு ஆடு மாடு கொடுக்கின்றனர்.
அவரால் எப்படி வளர்க்க முடியும். முறைகேடாக கால்நடை மானியம் வழங்கப்பட்டுள்ளதை நிருபிக்க தயாராக உள்ளேன்.மின்துறை தனியார் மயமாக்கம் என்று அறிவித்ததால், செயல்படாத நிலைக்கு சென்று விட்டது. கோவில் சொத்துக்களை மீட்பதுடன், அதன் விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோவில் சொத்து வாடகை முடிந்தால் அந்த இடத்தை ஏலம் விட்டு வருவாய் ஈட்டலாம். கோவில் நிலத்தை அபரித்தால் அழிவு நிச்சயம்.
சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
ஹோம்ஸ்டே பெயரில் இயங்கி வரும் சிறுசிறு விடுதிஒழுங்குப்படுத்த வேண்டும் என கூறினார்.