ADDED : ஜூன் 10, 2026 09:02 PM
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளை நேரு எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அரசு செயலர் முத்தம்மா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். உப்பனாறு வாய்க்காலில் பணிகள் நடைபெறுவதற்காக கொட்டி உள்ள மண்ணை அகற்ற வேண்டும். உப்பனாறு வாய்க்கால் கீழ் உள்ள சேற்றை வார வேண்டும்.
மழை காலங்களில் தண்ணீர் எளிதாக செல்லும் வகையில் கரை ஓரங்களில் உள்ள செடி கொடிகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என, கேட்டுக் கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சீனிவாசன், ராஜ்குமார், சுந்தரி, உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். கடந்த வாரம் இந்த வாய்காலை கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
