/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லேப்டாப் திருட்டு மர்ம நபருக்கு வலை
/
லேப்டாப் திருட்டு மர்ம நபருக்கு வலை
ADDED : செப் 11, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பஸ்சில் வைத்திருந்த லேப்டாப்பை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் ராகவன்,23; சென்னையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில், வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8 ம் தேதி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல அரசு விரைவு பஸ்சில் ஏறினார். தனது லேப்டாப் பேக்கை, லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். இந்திரா சதுக்கம் அருகே பஸ் சென்றபோது, லேப்டாப் பேக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.