ADDED : மார் 26, 2024 05:06 AM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் அருகே இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
வில்லியனுார் அருகே உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்,35; திருமணமான இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு நான்காவது வீட்டில் உள்ள இளம்பெண் குளியலறையில் குளித்துகொண்டிருந்த போது, பாலமுருகன் எட்டிப் பார்த்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு உறவினர்கள் வந்தபோது, பாலமுருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
புகாரின் பேரில் மங்கலம் சப் -இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து பாலமுருகனை தேடிவருகின்றனர்.
