/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க புது வசதி
/
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க புது வசதி
ADDED : மார் 13, 2025 06:44 AM
குடிமை பொருள் வழங்கல் துறை அறிவிப்புகள்:
இலவச அரிசிக்கு பதிலாக அதற்குண்டான தொகை நேரடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்தாண்டு டிசம்பர் முதல் அரிசி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இலவச அரிசி வழங்க பட்ஜெட்டில் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, குடிமை பொருள் வழங்கல் துறையின் ரேஷன் கார்டு சம்பந்தமாக அனைத்து சேவைகளும் பொது சேவை மையம், கிராம அளவிலான தொழில் முனைவோர்கள் மூலமாக விரிவுப்படுத்தபடும். புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் சேவைகள் பொதுமக்கள் இணையதளத்தில் தாங்களாகவே செய்து கொள்ள வழிவகை செய்யப்படும்.