/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய இந்திய குற்றவியல் சட்டங்கள் கண்காட்சி
/
புதிய இந்திய குற்றவியல் சட்டங்கள் கண்காட்சி
ADDED : மே 10, 2024 12:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில், புதிய இந்திய குற்றவியல் சட்டங்கள் இருநாள் கண்காட்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் சட்டத்துறை மற்றும் பல்கலையின் ஆனந்த ரங்கபிள்ளை நூலகம் இணைந்து, இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய போஸ்டர் கண்காட்சியை, சமீபத்தில் இரு நாட்கள் நடத்தின.
வரும் ஜூலையில் நடைமுறைக்கு வரவிருக்கும் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்குத் தெரியப்படுத்துவது, இந்த நிகழ்வின் நோக்கம். இந்த கண்காட்சியை, போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, புதுச்சேரி பல்கலை பொறுப்பு துணைவேந்தர் தரணிக்கரசு, சட்டத்துறை டீன் விக்டர் ஆனந்த்குமார், பல்கலை நுாலகர் விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், பல்கலை இயக்குனர் கிளமெண்ட் லூர்தஸ், சட்டத்துறை தலைவர் குருமிந்தர் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் விக்டர் ஆனந்தகுமார் வரவேற்றார். உதவி பேராசிரியர் ஷியாம்தானு பால் அறிமுக உரை நிகழ்த்தினார். போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, தொடக்க உரையாற்றினார். பல்கலை பொறுப்பு துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை உரையாற்றினார்.
இறுதியாக பல்கலை நூலகர் விஜயகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.