ADDED : மார் 26, 2024 10:38 PM

புதுச்சேரி : புதுச்சேரி, தந்தை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் பள்ளியில், 3ம் ஆண்டு விழா யு.கே.ஜி., மழலையர்களுக்கு பட்ட மளிப்பு விழா, முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். விழாவில் மழலையர்களின் யோகா, கராத்தே, ஜிம்னாஸ்டிக், வில் அம்பு எய்தல், நடனம், அரண்மனை நாடகம், காணொலி வினாடி வினா ஆகிய போட்டிகள் நடந்தது.
விழாவில் பள்ளி முதல்வர் கவிதா, ஆலோசகர் ரத்தின பிரியா வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக, நுகர்வோர் கோர்ட் நீதிபதி முத்துவேல், உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் மாறன் போட்டி யில் வெற்றி பெற்ற மழலை யர்களுக்கு பரிசுகள் மற்றும்சான்றிதழ்களை வழங்கினார்.
குழந்தைகள் நல டாக்டர் பாரதி, யு.கே.ஜி., வகுப்பு முடித்த மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
டாக்டர் ரத்தினவேல் காமராஜன், கால்நடை டாக்டர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். கோஜரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் சுந்தர்ராஜன், மழலையர்களை வாழ்த்தி பேசினார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா, மகாலட்சுமி, சோனியா மேரி மேற்கொண்டனர்.
