ADDED : மே 17, 2026 11:14 PM
வசூல்ராஜா திரைப்பட காதநாயகன் போல்
எம்.பி.பி.எஸ்.: காரைக்கால்: காரைக்காலில் தனியார் மருந்துவக்கல்லூரியில் இறுதியாண்டு 66 வயது எம்.பி.பி.எஸ்., படிக்கும் மூதாட்டி இளம் மாணவிகளுடன் வசூல்ராஜா திரைப்பட காதநாயகி போல் படிக்கும் மூதாட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் விநாயக மிஷின் மருந்துவக்கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.,மருந்துவப்படிப்பு படித்து வருகின்றனர். கல்விக்கு வயது இல்லை என்ற நோக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுஜாதா ஜடா 66 இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பின்னர் ஓய்வுக்குப் பிறகு அமைதியாக வாழ்க்கையை கழிக்காமல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற மூதாட்டி சுஜாதா ஜடா காரைக்காலில் உள்ள தனியார் விநாயக மிஷின் மருந்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.,சேர்ந்தார்.தற்போது 66 வயதில் இறுதியாண்டு படித்து வருகிறார். மூதாட்டி முதல் முறையாக கல்லூரிக்கு வரும் போது அனைத்து மாணவர்களும் கல்லூரி பேராசிரியர் என நினைத்து வரவேற்றுள்ளனர். பின்னர் நானும் உங்களைப் போல ஒரு மாணவிதான் என்று சுஜாதா ஜடாவை கூறியுள்ளார்.இதை கண்டு மாணவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.பின்னர் மாணவர்களுடன் வயது மூப்பு இல்லாத அனைவரும் சகஜமாக பழகியுள்ளார். பின்னர் சுஜாதாஜடாவுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இந்த வயதிலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவருடைய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. வகுப்புகளை மிகவும் கவனமாக கேட்பார். கல்லூரியில் ஆர்வமாக பங்கேற்பார் என்று போராசிரியர்கள் கூறுகின்றனர். தற்போது இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்.,படித்து வரும் சுஜாதா ஜடா கூறுகையில்.,என் கிராமத்தில் சிறிய மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்வதே என் கனவு மேலும் வயது என்பது ஒரு எண் மட்டுமே மனதில் உறுதி இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்று கூறினார்.தற்போது மருந்துவக்கல்லூரியில் 66 வயதில் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்.,படிக்கும் மூதாட்டி இளம் மாணவிகளுடன் வசூல்ராஜா திரைப்பட காதநாயகி போல் படிக்கும் மூதாட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
படம் விளக்கம்.காரைக்காலில் தனியார் மருந்துவக்கல்லூரியில் இறுதியாண்டு 66 வயது எம்.பி.பி.எஸ்.,படிக்கும் மூதாட்டி சுஜாதா ஜடா இளம் மாணவிகளுடன் வசூல்ராஜா திரைப்பட காதநாயகி போல் படிக்கும் மூதாட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
