/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டியை கீழே தள்ளிய ஏட்டு 'சஸ்பெண்ட்'
/
மூதாட்டியை கீழே தள்ளிய ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 15, 2025 04:56 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 70; இவரது பேரன் படையப்பா, 24; நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை தொடர்பாக காயமடைந்து, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அங்கு தகராறில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமரசம் செய்தனர். படையப்பாவை மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, போலீஸ் ஏட்டு ஜெயச்சந்திரன், அடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மூதாட்டி சின்னபொண்ணு, போலீஸ்காரர் ஜெயச்சந்திரனை தடுத்தபோது, அவரை நெட்டித் தள்ளியதில் மூதாட்டி கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் பேரில் ஏட்டு ஜெயச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டார்.

