/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெய்வேலி லாரி டிரைவர் புதுச்சேரியில் மர்ம மரணம்
/
நெய்வேலி லாரி டிரைவர் புதுச்சேரியில் மர்ம மரணம்
ADDED : ஏப் 24, 2024 07:12 AM
பாகூர் : முள்ளோடையில் இறந்து கிடந்த லாரி டிரைவரின் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி கெங்கைகொண்டானை சேர்ந்தவர் முருகன்,42; என்.எல்.சி.,யில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி 9 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், கடந்த 5 ஆண்டாக முருகன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 21ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடை நுழைவு வாயில் அருகே முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், முருகனின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முருகனின் சகோதரர் ஆசைதம்பி,45; கொடுத்த புகாரின் பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப் பதிந்து முருகன் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

