sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வட இந்திய தொழிலதிபர்கள் நமச்சிவாயத்திற்கு ஆதரவு

/

வட இந்திய தொழிலதிபர்கள் நமச்சிவாயத்திற்கு ஆதரவு

வட இந்திய தொழிலதிபர்கள் நமச்சிவாயத்திற்கு ஆதரவு

வட இந்திய தொழிலதிபர்கள் நமச்சிவாயத்திற்கு ஆதரவு


ADDED : ஏப் 03, 2024 02:49 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் காமராஜ் நகர் சட்டசபை தொகுதியில் உள்ள வட இந்திய தொழிலதிபர்கள் பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காமராஜர் நகர் தொகுதியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஜான்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பா.ஜ., பிரமுகர் அஸ்வின்குமார் முன்னிலை வகித்தார். சிகர்ஜெயின், பாரத் சர்மா ஆகியோர் வரவேற்றனர். எம்.எல்.ஏ.,கள் ராமலிங்கம், ரிச்சர்ட் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மகேஸ்வரி சமாஜ் தலைவர் ஜகதீஷ் போர்வால், திகம்பர் சமாஜ் தலைவர் சோகன்லால் பஹாரியா, ஸ்வேதாம்பர் சமாஜ் தலைவர் பிரவீன் சோலங்கி, ஜாட் சமாஜ் தலைவர் பாலுராம் சவுத்ரி உட்பட மார்வாடி, குஜராத்தி மற்றும் பீகாரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

இதில் வட இந்திய தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மீண்டும் மோடி பிரதமராக வர, புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என, தெரிவித்தனர்.

பா.ஜ., மூத்த நிர்வாகி ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் மொபைல் சரவணன், மாவட்ட தலைவர் தண்டபாணி, தொழில் பிரிவு தலைவர் செல்வகுமார், தகவல் தொடர்பு பிரிவு மாநிலத் தலைவர் மகேஷ்ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us