/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் பற்றாக்குறையால் திணறும் வடக்கு போக்குவரத்து
/
போலீஸ் பற்றாக்குறையால் திணறும் வடக்கு போக்குவரத்து
போலீஸ் பற்றாக்குறையால் திணறும் வடக்கு போக்குவரத்து
போலீஸ் பற்றாக்குறையால் திணறும் வடக்கு போக்குவரத்து
ADDED : செப் 08, 2024 05:44 AM
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுதவிர வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து விடுவதால், வாகன போக்குவரத்தை சரிசெய்வது போக்குவரத்து போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது.
குறிப்பாக வடக்கு போக்குவரத்து பிரிவின் கீழ் இ.சி.ஆர்., சிக்னல்கள், ராஜிவ் சதுக்கம், இந்திரா சதுக்கம் என பிரதான சிக்னல்கள் உள்ளது. ஒவ்வொரு சிக்னலிலும் 3 முதல் 5 பேர் 2 ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும். வடக்கு போக்குவரத்து பிரிவில் மட்டும் 20 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு சிக்னலிலும் 2 போலீசார் மட்டும் பணியில் உள்ளனர்.
பணியில் உள்ள குறைந்த கான்ஸ்டபிள்களை கொண்டு ராஜிவ், இந்திரா சிக்னல் இயக்கப்படுகிறது.
இரு சிக்னலிலும்விளக்குகள்பழுதாகி கிடப்பதால், சரியான நேரத்திற்கு சிக்னல்கள் இயக்க முடியவில்லை.
இதனால் 4 பக்கமும் தாறுமாறாக வாகனங்கள் செல்ல முற்படுகின்றன.
பணியில் உள்ள 2 போலீசாரால் சிக்னல்களை சரிவர கண்காணிக்க முடிவதில்லை. சிக்னல் விளக்கால் ஏற்படும் குழப்பத்தால் 4 பக்கமும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. எதிர் திசையில் வாகனங்கள் கடந்து செல்லும்போதே, விதிமுறைகளை மீறி சிக்னலை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாய சூழல் உருவாகி உள்ளது.
ராஜிவ் சிக்னலில் வழுதாவூர் சாலை, கோரிமேடு,இ.சி.ஆர்., பகுதியில் ப்ரிலெப்ட் பகுதியை அடைத்து கொண்டு நிற்கும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.பல தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்திலும் புதுச்சேரியில் உள்ள 2 சிக்னல்களை சரிவர இயக்க முடியாமல் கிடப்பது வேதனை அளிக்கிறது.