/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடலுாரில் போராட்டம் அறிவிப்பு நாம் தமிழர் கட்சியினர் 47 பேர் கைது
/
வடலுாரில் போராட்டம் அறிவிப்பு நாம் தமிழர் கட்சியினர் 47 பேர் கைது
வடலுாரில் போராட்டம் அறிவிப்பு நாம் தமிழர் கட்சியினர் 47 பேர் கைது
வடலுாரில் போராட்டம் அறிவிப்பு நாம் தமிழர் கட்சியினர் 47 பேர் கைது
ADDED : மே 05, 2024 05:44 AM
கடலுார், : வடலுாரில் நேற்று போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுார் சத்திய ஞான சபை வளாகத்தில், ரூ. 100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணியை அரசு துவங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில், சீமான் தலைமையில் நேற்று வடலுாரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த போவதாக அக்கட்சியினர் அறிவித்தனர்.
அதையடுத்து, கடலுாரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை, நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமி உட்பட 7 பேரை, டி.எஸ்.பி., பிரபு தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
மேலும், வடலுார் போராட்டத்திற்கு சேலத்தில் இருந்து வந்த 40 பேரை சிதம்பரத்தில் போலீசார் கைது செய்தனர்.
விரட்டிய போலீஸ்
நாம் தமிழர் கட்சி சென்னை தலைமை நிலைய செயலாளராக இருப்பவர் செந்தில். இவர், குடும்பத்துடன் நேற்று சொந்த ஊரான புவனகிரிக்கு காரில் சென்றார்.
இதையறிந்த கடலுார் போலீசார், போராட்டத் திற்கு செல்கிறார் என, அவரை கைது செய்ய கடலுார் பீச் ரோடு சந்திப்பில் காத்திருந்தனர்.
ஆனால், செந்தில், மாற்று வழியாக சிதம்பரம் ரோட்டில் சென்றார்.
இதையறிந்த கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார், விரட்டிசென்று முதுநகரில் செந்தில் காரை தடுத்து நிறுத்தினர்.
குடும்பத்துடன் சொந்த ஊரான புவனகிரிக்கு செல்கிறேன் என அவர் கூறியதை தொடர்ந்து, போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.