/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் செலவின கணக்கு காட்டாத 10 வேட்பாளர்களுக்கு 'நோட்டீஸ்'
/
தேர்தல் செலவின கணக்கு காட்டாத 10 வேட்பாளர்களுக்கு 'நோட்டீஸ்'
தேர்தல் செலவின கணக்கு காட்டாத 10 வேட்பாளர்களுக்கு 'நோட்டீஸ்'
தேர்தல் செலவின கணக்கு காட்டாத 10 வேட்பாளர்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஏப் 07, 2024 04:52 AM

புதுச்சேரி : தேர்தல் செலவின கணக்கு காட்டாத 10 வேட்பாளர்களுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவினங்களை முறையாகப் பராமரித்து ஏப்ரல் 5, 11, மற்றும் 16 ஆகிய தேதிகளில் செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக செலவினப் பார்வையாளர்களாக முகமது மன்சருல் ஹாசன், லட்சுமிகாந்தா ஆகியோர் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவின முதல் சரிபார்ப்புக் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டராக கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது. இதில், 26 வேட்பாளர்களில் 16 வேட்பாளர்கள் முகவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த 16 வேட்பாளர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவினக் கணக்குகளை தேர்தல் துறையால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழு பராமரித்து வரும் செலவின நிழற் பதிவேட்டின் கணக்குகளோடு ஒப்பிட்டு சரிபார்த்ததில் 12 வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள் சரியானது என ஏற்றுக் கொள்ளப்பட்டது. 3 வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள், தேர்தல் துறையால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவின நிழற்பதிவேட்டின் கணக்குகளோடு வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மேலும், செலவினக் கணக்குளைச் சமர்ப்பிக்காமல் கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்ட ஒரு வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொள்ளாத மற்றும் தேர்தல் செலவினக் கணக்குகளைச் சமர்ப்பிக்காத 10 வேட்பாளர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் தங்களது விளக்கத்தை அளிக்குமாறு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

