/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி பூங்காவில் 'போட்டோ ஷூட்' ரூ.500 கட்டணம் அறிவிப்பு
/
பாரதி பூங்காவில் 'போட்டோ ஷூட்' ரூ.500 கட்டணம் அறிவிப்பு
பாரதி பூங்காவில் 'போட்டோ ஷூட்' ரூ.500 கட்டணம் அறிவிப்பு
பாரதி பூங்காவில் 'போட்டோ ஷூட்' ரூ.500 கட்டணம் அறிவிப்பு
ADDED : மே 04, 2024 07:13 AM

புதுச்சேரி: பாரதி பூங்காவில் போட்டோ, வீடியோ ஷூட் நடத்த 500 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என, புதுச்சேரி நகராட்சி அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பிரெஞ்சு பாரம்பரிய கட்டடங்கள், ஏராளமான நினைவுச் சின்னங்கள் உள்ளன. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த பாரம்பரிய கட்டடங்கள் முன் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல், பாரதி பூங்காவிலும் போட்டோ மற்றும் செல்பி எடுக்கின்றனர். குறிப்பாக பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபம், புல் தரை, சிற்பங்களுடன் கூடிய கலையமிக்க கல்துாண்கள் அருகே போட்டோ ஷூட் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பாரதி பூங்கா மூலம் புதுச்சேரி நகராட்சி வருவாயை ஈட்டும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு பாரதி பூங்கா முன், பேனர் வைத்துள்ளது. அதில் பாரதி பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியின் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும். இதற்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அப்போது தான் அனுமதி வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பாரதி பூங்காவில் புகைப்படங்கள், வீடியோ எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறை நேற்று நடைமுறைக்கு வந்தது. அதேநேரத்தில் மொபைல் போன்களில் படம் எடுக்க தடை இல்லை. கேமராக்கள் மூலம் படம் எடுக்க மட்டுமே கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்' என்றனர்.
அங்கேயே அனுமதி தரலாமே...
பாரதி பூங்காவில் போட்டோ, வீடியோ ஷூட் எடுக்க வருவாய் பிரிவினை அணுகி அனுமதி பெற வேண்டும் என்றாலும், வெளியூர் பயணிகளுக்கு அலைச்சலை ஏற்படுத்துகிறது. நகராட்சியின் வருவாய் பிரிவு எங்கு உள்ளது என, தெரியாமல் பலரிடம் கேட்டு அலைகின்றனர்.
இதற்கு பதிலாக பாரதி பூங்கா நுழைவு வாயிலேயே போட்டோ, வீடியோ ஷூட் அனுமதி தந்தால் சுற்றுலா பயணிகள் அலைச்சல் இல்லாமல், கட்டணம் செலுத்தி, அனுமதி பெறுவர்.