/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர் காங்., ஆதரவு தேவையில்லை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆவேசம்
/
என்.ஆர் காங்., ஆதரவு தேவையில்லை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆவேசம்
என்.ஆர் காங்., ஆதரவு தேவையில்லை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆவேசம்
என்.ஆர் காங்., ஆதரவு தேவையில்லை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆவேசம்
ADDED : ஜூலை 06, 2024 04:42 AM
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் என்.ஆர் காங்., ஆதரவு எனக்கு தேவையில்லை என, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் டில்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து சராமரியாக புகார் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் கூறியதாவது:
முதல்வர் ரங்கசாமி மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆனால் தொகுதி, மாநில வளர்ச்சி சம்பந்தமாக எம்.எல்.ஏ.க்களின் கருத்தை கேட்கவில்லை. லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் எங்களது கூட்டணி தோல்வியடைந்துள்ளது.
இப்படியே போனால் சட்டசபை தேர்தலில் இது போன்ற பாதிப்பு ஏற்படும்.
ஆனால் தேர்தல் முடிந்தும் கூட மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. எனவே வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்று கட்சி மேலிடத்திடம் சொல்லியுள்ளோம்.
எந்த பதவிக்கும் நான் ஆசைப்படுவதில்லை. தேர்தல் தோல்வியால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எப்படி செயல்பட்டால் பா.ஜ., அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க முடியும் என்பதற்காக தான் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.
அமைச்சர் மாற்றம், வாரிய தலைவர் பதவி கேட்டு நாங்கள் இதை செய்யவில்லை.
காலாப்பட்டு தொகுதியில் நான் பா.ஜ., வேட்பாளராக நின்றேன். என்.ஆர். காங் கூட்டணியில் யாரும் எனக்கு வேலை செய்யவில்லை. என்னை எதிர்த்து சுயேச்சைவேட்பாளரையும் நிறுத்தினர்.
அவர் இரண்டாம் இடத்திற்கு வந்தார். என்.ஆர்.காங்., ஆதரவு எனக்கு தேவையில்லை. தனித்து நின்றாலே பா.ஜ.,வில் வெற்றி பெறுவேன்' என்றார்.