ADDED : ஜூலை 22, 2026 10:01 PM
வில்லியனுார், ஜூன். 23–
மங்களம் தொகுதி சார்பில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மங்கலம் தொகுதி சார்பில் என்.ஆர். காங்., தலைவரும், முதல்வருமான ரங்கசாமியின் 76-வது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சியாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வில்லியனுார் சுந்தரலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் முன்னாள் சேர்மன் பாலமுருகன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை விழாவை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச மருத்துவ முகாம், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளை மேற்கொண்டு கொ்ணடாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் மாநில பிரதிநிதி பழனிவேல், முன்னாள் வாரியத் தலைவர் ரேவதி பர்குணன், நிர்வாகிகள் சங்கர், செல்வம், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டன
