/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
/
விவேகானந்தா அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
விவேகானந்தா அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
விவேகானந்தா அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா
ADDED : ஆக 17, 2024 02:37 AM

புதுச்சேரி: வில்லியனுார் விவேகானந்தா அரசுப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அறிமுக விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். அலுவலக கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வேல்முருகன் வரவேற்றார்.
நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் சேவை மனப்பான்மை குறித்து பேசினார்.
விலங்கியல் விரிவுரையாளர் லதா, பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கணினி ஆசிரியர் முருகானந்தம் கருத்துரை வழங்கினார். கேரளா மாநிலம், வயநாடு பகுதி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட நிவாரணத் தொகை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விரிவுரையாளர்கள் விநாயகம், வெங்கடாசலபதி, ராஜேஷ், அருள்செல்வி, தேவி பாலா, ரேவதி, ரவிசங்கர், ஆசிரியர்கள் வீரபத்திரன், நாகப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இறைவாசன் நன்றி கூறினார்.