ADDED : ஆக 03, 2026 09:11 PM
புதுச்சேரி: பிம்ஸ் செவிலியர் கல்லுாரி பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.
மருத்துவகல்லுாரி முதல்வர் ரேணு தலைமை தாங்கினார். செவிலியர் கல்லுாரி துணைமுதல்வர் நவநீதா வரவேற்றார். பதிவாளர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.
செவிலியர்கல்லுாரி முதல்வர் அன்னாள் ஏஞ்சலின் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜாஸ்மின் கலந்து கொண்டு 96-இளங்கலை, 8-முதுகலை, 1-முனைவர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். தொடர்ந்து சிறந்த செவிலியர், மாணவிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. செவிலியர் கண்காணிப்பாளர் அமிர்த சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
துணை போராசிரியர் சுகன்யா நன்றி கூறினார்.
