/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் கலந்தாய்வு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
/
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் கலந்தாய்வு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் கலந்தாய்வு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் கலந்தாய்வு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
ADDED : மே 10, 2024 01:32 AM
புதுச்சேரி: கடந்தாண்டை போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்க தவைர் பாலா, கவர்னர்,முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்த கல்வியாண்டு செவிலியர் படிப்பிற்கு அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள செவிலியர் இடங்களை கலந்தாய்வு நடத்துவது சம்பந்தமாக சுகாதாரத் துறை உடனடியாக முடிவெடுத்து,டில்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்.
புதுச்சேரியில் ஏற்கனவே நீட் அல்லாத படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப விநியோகம் துவங்கி விட்டது.அதில் பி.எஸ்சி.,நர்சிங் படிப்பிற்கும் சேர்த்தே விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில் துணை மருத்துவ படிப்புகளுக்கான பி.எஸ்சி.,செவிலியர்,ஏ.என்.எம்.,ஜி.என்.எம்.,போன்ற செவிலியர் படிப்புகளில் அரசு மற்றும் தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒரே நேரத்தில் தான் புதுச்சேரி மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும். எனவே நர்சிங் படிப்பிற்கு நுழைவு தேர்வு நடத்த போதுமான கால அவகாசம் இல்லை.
எனவே, இந்த 2024-25 கல்வியாண்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட சூழ்நிலையில்,கடந்த ஆண்டை போல செவிலியர் பாடபிரிவிற்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் பொதுகலந்தாய்வு மூலம் செவிலியர் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
அனைத்து கல்வி மற்றும் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக நடைமுறைகளை பின்பற்றும் புதுச்சேரி அரசு செவிலியர் மாணவர் சேர்க்கையிலும்,தமிழகத்தை பின்பற்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை சென்டாக் மூலம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.