/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருளஞ்சந்தை கிராமத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
/
இருளஞ்சந்தை கிராமத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
ADDED : மார் 27, 2024 11:36 PM
பாகூர் : இருளஞ்சந்தை அங்கன்வாடி மையத்தில், உலக வாய் சுகாதார தினம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், பாகூர் அரசு மருத்துவமனை டாக்டர் தமிழ்வேந்தன் கலந்து கொண்டு, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பல் மருத்துவர் தேவி, பல் பராமறிப்பின் அவசியம், பராமறிப்பு முறைகள் குறித்து விளக்கினார். இருளஞ்சந்தை அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் சுமதி, ஆசிரியர் பச்சையப்பன் சிறப்புரையாற்றினர். மேலும், காய்கறிகள், பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் செல்வி, தேவிகா ஆகியோர் செய்திருந்தனர்.

