/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 07, 2024 06:56 AM

புதுச்சேரி : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை திட்டம் 3, சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா அரியாங்குப்பம் அங்கன்வாடி மையத்தில் நடந்தது.
அரியாங்குப்பம் திட்டம் 3 அதிகாரி நிர்மலா தேவி தலைமை தாங்கினார். தொடர்ந்து நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தை அரியாங்குப்பம் மையத்தைச் சேர்ந்த 163 ஊழியர்கள் கலந்து கொண்டு ஊட்டசத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து அவசியம் குறித்து பதாகைகளை கையில் ஏந்திய படி, ஆட்டோ பிரசாரம் மற்றும் பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலம் அரியாங்குப்பம் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் அங்கன்வாடி மையத்திற்கு வந்தது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.