
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சுகாதாரத்துறை இணைந்து உலக தாய்ப்பால் வார விழா மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி நடந்தது.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறந்த முறையில் ஊட்டச்சத்து கொடுத்த பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
குழந்தைகளுக்கு சிறந்த, சத்தான உணவுகளை வழங்க மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.