ADDED : மே 08, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அன்னை தெரசே நகரைச் சேர்ந்தவர் அரசன் மகன் முத்துக்குமார் 23, இவர் நேற்று முன்தினம் மாலை அதிகமாக குடித்துவிட்டு மடுகரை-கொங்கம்பட்டு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த மடுகரை போலீசார் முதுக்குமாரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் பொதுமக்களை ஆபாசமாக பேசியதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

