/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குருமாம்பேட் குப்பை கிடங்கில் இருந்து வீசும் துர்நாற்றம்; 3 கி.மீ., வரை பரவியதால் மக்கள் கடும் அவதி
/
குருமாம்பேட் குப்பை கிடங்கில் இருந்து வீசும் துர்நாற்றம்; 3 கி.மீ., வரை பரவியதால் மக்கள் கடும் அவதி
குருமாம்பேட் குப்பை கிடங்கில் இருந்து வீசும் துர்நாற்றம்; 3 கி.மீ., வரை பரவியதால் மக்கள் கடும் அவதி
குருமாம்பேட் குப்பை கிடங்கில் இருந்து வீசும் துர்நாற்றம்; 3 கி.மீ., வரை பரவியதால் மக்கள் கடும் அவதி
ADDED : ஜூலை 31, 2024 04:09 AM

புதுச்சேரி : குருமாம்பேட் குப்பை கிடங்கில் மலைபோல் தேங்கியுள்ள குப்பையால் உருவாகியுள்ள கடும் துர்நாற்றம், 3 கி.மீ., வரை வீசுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படு கிறது. ஒரு நாளைக்கு தினசரி 380 முதல் 390 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை 23 ஏக்கரில் அமைக்கப்பட்ட குருமாம்பேட் குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள 5.53 லட்சம் டன் குப்பையை அகற்ற ரூ. 42.6 கோடி மதிப்பில், பயோ மைனிங் தொழில்நுட்ப முறையில் அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
மலைபோல் குவிந்துள்ள குப்பையில் நுண்ணுயிரிகள் பயன்படுத்தி, வெற்று நிலமாக ஒப்படைக்க வேண்டும் என்பது டெண்டர் விதி. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் 12.1 ஏக்கர் நிலத்தில் உள்ள குப்பையை சுத்தம் செய்து கொடுத்தனர்.
அடுத்த கட்டமாக மீதமுள்ள 3.4 லட்சம் டன் குப்பையை ரூ. 34 கோடி மதிப்பில் அப்புறப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு செப்., மாதம் துவங்கியது.
தற்போது 3.3 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. டெண்டர் விடும் இடைப்பட்ட 7.5 மாத காலத்தில் ஒரு மாதம் 12 ஆயிரம் டன் விதம் 90 ஆயிரம் டன் குப்பைகள் கடந்த ஆண்டு இறுதியில் தனியாக மலைபோல் குவிக்கப்பட்டது.
இந்த குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீச துவங்கியது. துர்நாற்றம் குருமாம்பேட் சுற்றி 3 கி.மீ., துாரம் வரை பரவியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்; இரண்டு கட்டமாக குப்பை அகற்றிய பின்பு, கடைசியாக சேர்ந்த 96 ஆயிரம் டன் குப்பைகள் சமீபத்தில் சேர்ந்தவை. பல ஆண்டுகள் தேங்கிய குப்பையில் துர்நாற்றம் வராது.
ஆனால் சமீபத்தில் சேர்ந்த குப்பை அழுகி தண்ணீர் வடியும் நிலையில் உள்ளது. 3 மாதத்திற்குள் ஒட்டுமொத்த குப்பையும் அகற்றப்படும் என தெரிவித்தனர்.