/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு
/
ஜிப்மர் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 07, 2024 03:55 AM
புதுச்சேரி : மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவ கழிவுகளை லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆர்., வீதி வளாக பகுதியில் கொட்டப்பட்டதாகவும், அதனால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜிப்மர் மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, மருத்துவ கழிவுகளை துத்திப்பட்டில் உள்ள மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவனத்திற்கு ஜிப்மர் நிர்வாகம் முறைப்படி அனுப்பி வைப்பது கண்டறியப்பட்டது. ஆனால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், திடக்கழிவுகளை சரிவர அகற்றாமல் கொட்டி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் விதியின்படி, திடக்கழிவுகள் அகற்றாதது குறித்து ஜிப்மர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளனர்.