/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஒஜி அரினா டர்ப்' விளையாட்டு மைதானம் திறப்பு புதுச்சேரியில் ஜாலியாக கிரிக்கெட், கால்பந்து விளையாடி மகிழலாம்

ADDED : ஜூலை 08, 2024 04:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஒயிட் டவுனில், கமர்ஷியல் ரீதியாக 'ஒஜி அரினா டர்ப்' என்ற கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ஒஜி அரினா நிறுவனம், ஒயிட் டவுன் அண்ணா சாலையில், ராஜா தியேட் டர் சிக்னல் அருகே எண்.194ல் 'ஒஜி அரினா டர்ப்' என்ற பெயரில், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு மைதானத்தை கமர்ஷியல் ரீதியாகஏற்படுத்தியுள்ளது.
இந்த மைதானம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிறுவனத்தின் முதன்மைசெயல் அதிகாரி தந்துவரதன் தலைமை தாங்கினார். மேலாண் இயக்குனர் திவ்யலட்சுமி வரவேற்றார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் ஆகியோர் மைதானத்தை திறந்து வைத்து பார்வை யிட்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், ராமலிங்கம் எம்.எல்.ஏ., குடும்பத்தினர், கணேஷ், சபரிநாதன், வைரமணி, சத்ய பிரியா, கார்த்திகேயன், கஜவள்ளி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
மேலாண் இயக்குனர் திவ்யலட்சுமி கூறியதாவது:
ஒஜி அரினா டர்ப் விளையாட்டு மைதானம் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஜாலியாக கிரிக் கெட், கால்பந்து விளையாட ஏற்றது.
மொத்தம் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. இதில், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவு டர்ப் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சமாக கிரிக்கெட் மைதானம் டைகோனல் வடிமைப்பில் பிட்சை கொண்டுள்ளது.
எனவே, லெக் சைடு, ஆப் சைடு, நேராக சிக்சரை விளாச முடியும். பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நீங்கள் விளை யாடிய உணர்வினை நிச்சயம் தரும். கிரிக்கெட் விளையாட்டில் தன்னம்பிக்கையும் பல மடங்குஅதிகரிக்க செய்யும்.
எந்த வித தொந்தரவு இல்லாமல் மேட்ச் விளையாட சிறந்த இடம்.வார விடுமுறையில் புதுச் சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், புக்கிங் செய்து ஜாலியாக விளையாடி மகிழலாம்.
ரெஸ்ட் ரூம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.