ADDED : ஆக 29, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
புதுச்சேரி, லுாயி பிரகாசம் நகரை சேர்ந்தவர் நடராஜன், 58. இவர் கடந்த, 19,ம் தேதி ஆம்பூர் சாலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி, தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
சாலை பணிகள் நடந்து கொண்டிருந்ததால், நடராஜன் திடீரென பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடன் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, நடராஜன் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.