/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய துறைமுக பல்நோக்கு அரங்கு: டி.ஜி.பி., அலுவலகமாக மாற்ற ஆய்வு
/
பழைய துறைமுக பல்நோக்கு அரங்கு: டி.ஜி.பி., அலுவலகமாக மாற்ற ஆய்வு
பழைய துறைமுக பல்நோக்கு அரங்கு: டி.ஜி.பி., அலுவலகமாக மாற்ற ஆய்வு
பழைய துறைமுக பல்நோக்கு அரங்கு: டி.ஜி.பி., அலுவலகமாக மாற்ற ஆய்வு
ADDED : ஆக 30, 2024 05:47 AM

புதுச்சேரி: போலீஸ் தலைமையக அலுவலக கட்டடம் புனரமைக்கப்பட உள்ளதால், பழைய துறைமுகம் பல்நோக்கு அரங்கை டி.ஜி.பி., அலுவலகமாக மாற்றலாமா என போலீசார் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி துய்மா வீதியில் உள்ள போலீஸ் தலைமையகமான டி.ஜி.பி., அலுவலகம், கடந்த பிரஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 200 ஆண்டு பழமையான கட்டடம். இக்கட்டடம் பிரஞ்சு ராணுவம் அலுவலகம் இயங்கி வந்தது. டி.ஜி.பி., அலுவலகத்தை பழமை மாறாமல் புனரமைக்க போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது. அதனால் தற்காலிகமாக ஒராண்டு காலத்திற்கு டி.ஜி.பி., அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில், ஏ.சி. வசதி, பால் சிலிங், வீடியோ, ஆடியோ வசதிகளுடன் பல்நோக்கு அரங்காக (கன்வெர்ஷன் சென்டர்) கடந்த 2021ம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலே ரூ.4.44 கோடி மதிப்பில், பொதுப்பணித்துறை சார்பில் ஆம்பி தியேட்டர் வடிவமைப்பில் நகர பொழுதுபோக்கு மையம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பல்நோக்கு அரங்கு, நகர பொழுதுபோக்கு மையம் இரண்டும் இதுவரை திறக்கப்படவில்லை.
போலீஸ் தலைமையக கட்டடம் புனரமைக்கப்படும் வரை, பழைய துறைமுக வளாக பல்நோக்கு அரங்கை டி.ஜி.பி., அலுவலகமாக மாற்றி பயன்படுத்தலாமா என போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி., அனிதாராய், எஸ்.பி., ரட்சனாசிங் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறையினருடன் நேற்று பல்நோக்கு அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

