/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
ஓம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : செப் 16, 2024 05:33 AM

வில்லியனுார் : மூர்த்தி நகரில் புதியதாக அமைத்துள்ள ஓம்சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
வில்லியனுார் பைபாஸ் சாலை மூர்த்தி நகரில் புதியதாக அமைந்துள்ள பால வினாயகர், பால முருகர் மற்றும் ஓம்சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 13ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தீபாரதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து 14ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் தீபாராதனையும் நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு. பரிவாரங்கள், மூலவர் மற்றும் ஓம்சக்தி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பா.ஜ., ஏகாம்பரம், மோகித் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவை முன்னிட்டு தி.மு.க மற்றும் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை மூர்த்தி நகர் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

