/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கியூர் காது கருவிகள் பேச்சு பயிற்சி கிளினிக்கில் ஓணம் பண்டிகை
/
கியூர் காது கருவிகள் பேச்சு பயிற்சி கிளினிக்கில் ஓணம் பண்டிகை
கியூர் காது கருவிகள் பேச்சு பயிற்சி கிளினிக்கில் ஓணம் பண்டிகை
கியூர் காது கருவிகள் பேச்சு பயிற்சி கிளினிக்கில் ஓணம் பண்டிகை
ADDED : செப் 15, 2024 07:11 AM

புதுச்சேரி: கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சு பயிற்சி கிளினிக்கில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
வில்லியனுார் மெயின்ரோடு விவேகானந்தா நகரில் கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சு பயிற்சி கிளினிக் இயங்கி வருகிறது. இங்கு, ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பூக்களால் ஆன அத்தபூ கோலமிடப்பட்டது. பேச்சு மொழி மற்றும் கேட்பியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
மூகாம்பிகா இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி மாணவர்கள், கியூர் கிளினிக் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலுார், சிதம்பரம், காஞ்சிபுரம், சென்னை கிளைகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.