/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீண்டும் மாயமான 'சென்டர் மீடியன்' கன்னியக்கோவிலில் பரபரப்பு
/
மீண்டும் மாயமான 'சென்டர் மீடியன்' கன்னியக்கோவிலில் பரபரப்பு
மீண்டும் மாயமான 'சென்டர் மீடியன்' கன்னியக்கோவிலில் பரபரப்பு
மீண்டும் மாயமான 'சென்டர் மீடியன்' கன்னியக்கோவிலில் பரபரப்பு
ADDED : ஆக 25, 2024 05:42 AM

புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவிலில் மூன்றாவது முறையாக சென்டர் மீடியன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி - கடலுார் தேசிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல்வேறு இடங்களில் கான்கிரீட் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
அதுபோல், கன்னியக்கோவில் தனியார் மதுபான கடை எதிரே அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென மாயமானது. விபத்து அபாயம் ஏற்பட்டதால் பல்வேறு அமைப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் அங்கு இரும்பு பேரிகார்டு மூலமாக, தடுப்பு அமைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் அந்த சென்டர் மீடியன் பேரி கார்டு இரண்டாவது முறையாக மாயானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் மீண்டும் பேரி கார்டுகளை கொண்டு சென்டர் மீடியன் அமைத்தனர். அதனை அப்புறப்படுத்திய நபர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் அந்த இடத்தில் இருந்த பேரிகார்டுகள் மூன்றாவது முறையாக மாயமாகி உள்ளது. இதனால், அந்த இடத்தில், வாகனங்கள் கண்ட படி சாலையை கடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு முறை கான்கிரீட் தடுப்பு கட்டை, இரண்டு முறை இரும்பு பேரிகார்டுகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் மதுபான கடைக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.