தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்

இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்

இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 25, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ைஹதராபாத் இந்திய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை பயிற்சி மையம் ஆகியன இணைந்து உறுவையாறு சாய்பாபா கோவில் வளாகத்தில் இயற்கை விவசாயம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை நடத்தின.

பயிற்சி முகாமை வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வில்லியனுார் வேளாண் அலுவலர் தினேஷ்குமார் வரவேற்றார். சமிதி இயக்குனர் சிவசுப்ரமணியன் இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்து சிறப்புரையாற்றினார்.

முகாமில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ரவி, மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு கழக விஞ்ஞானிகள் குமாரராஜா, அரவிந்த் மற்றும் பஜன்கோ உழவியல் துறை தலைவர் மாலா இயற்கை விவசாயம் செய்வதற்கான முக்கிய உத்திகள் குறித்து விளக்கினர்.

முகாமில் வில்லியனுார், ஒதியம்பட்டு மற்றும் திருக்காஞ்சி ஆகிய உழவர் உதவியகத்தை சார்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். திருக்காஞ்சி வேளாண் அலுவலர் தினகரன் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை வில்லியனுார் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us