தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒரு ஊழியர், ஒரு மரம் திட்டம் சுற்றுச்சூழல் துறையில் துவக்கம்

ஒரு ஊழியர், ஒரு மரம் திட்டம் சுற்றுச்சூழல் துறையில் துவக்கம்

ஒரு ஊழியர், ஒரு மரம் திட்டம் சுற்றுச்சூழல் துறையில் துவக்கம்


ADDED : ஜூன் 05, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘ஒரு ஊழியர் ஒரு மரம்’ என்ற திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது.

துறையின் புதிய கட்டட வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மூத்த அறிவியல் அதிகாரி சகயா ஆல்பிரட், உறுப்பினர் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினர். சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் முன்னிலை வகித்தார்.

விழாவில், விஞ்ஞானிகள் சுமதி, ருக்மணி, இளநிலை பொறியாளர்கள் பிரபு, புகழேந்தி, விபின் பாபு தேவானந்தன், செல்வநாயகி, இளநிலை ஆய்வக உதவியாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, அசோக, சரங்கென்றை, மகிழம், மரமல்லி, மயில் கொன்றை, நாவல்  உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் ஒவ்வொருவரின் பெயரிலும் நடப்பட்டது. அந்த அனைத்து மரங்களும் ஜியோ டெக் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதன் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us