தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொன்முடி மீதான குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி 'பல்டி'

பொன்முடி மீதான குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி 'பல்டி'

பொன்முடி மீதான குவாரி வழக்கு மேலும் ஒரு சாட்சி 'பல்டி'


ADDED : ஏப் 23, 2024 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம், : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் நேற்று மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் 'பல்டி' எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அனுமதியை மீறி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு தரப்பில் உள்ள 67 சாட்சிகளில் இதுவரை 24 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 20 பேர் பிறழ் சாட்சி அளித்துள்ளனர்.

நேற்று நடந்த இவ்வழக்கு விசாரணையில் 25ம் சாட்சியாக ஆஜரான ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் கணபதி, 'உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன். எனக்கும் இவ்வழக்கு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது' என பிறழ் சாட்சியம் அளித்தார்.

அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என உத்தரவிட்டார்.

இதனால், இவ்வழக்கின் பிறழ் சாட்சியின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us