/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே வேளையாக பி.ஜி., நீட் நுழைவு தேர்வு பெற்றோர், மாணவர் சங்கங்கள் கோரிக்கை
/
ஒரே வேளையாக பி.ஜி., நீட் நுழைவு தேர்வு பெற்றோர், மாணவர் சங்கங்கள் கோரிக்கை
ஒரே வேளையாக பி.ஜி., நீட் நுழைவு தேர்வு பெற்றோர், மாணவர் சங்கங்கள் கோரிக்கை
ஒரே வேளையாக பி.ஜி., நீட் நுழைவு தேர்வு பெற்றோர், மாணவர் சங்கங்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2024 03:52 AM
புதுச்சேரி: நீட் பி.ஜி., நுழைவு தேர்வினை ஒரே வேளையாக நடத்த வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் பாலா, சென்டாக் மாணவர், பெற்றோர் நல சங்க தலவர் கல்யாணசுந்தரம், அகில இந்திய பெற்றோர் நல சங்க தலைவர் மேத்யூ, செயலாளர் நாராயணன் ஆகியோர் கூட்டாக தேசிய மருத்துவ கவுன்சில் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ பிரிவு தலைவர் கங்காதரனுக்கு அனுப்பியுள்ள மனு:
கடந்த மாதம் 21ம் தேதி நடக்க இருந்த நீட் பி.ஜி., நுழைவு தேர்வு தற்போது அடுத்த மாதம் 11ம் தேதி காலை, மாலை என இருவேளையாக நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தேர்வு நடத்தினால் சமநிலையில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
காலை பிரிவில் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாளும், மாலை பிரிவில் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் கேள்வி தாள்கள் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் நீட் மதிப்பெண் சமநிலையில் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப் படுவர்.
தகவல் கையேட்டில் நீட் தேர்வு காலையில் மட்டுமே நடக்கும் என அரசு அறிவித்துவிட்டு, தற்போது இருவேளையாக தேர்வு நடத்தப்படும் என்பது மாணவர் சமுதாயத்தை பாதிக்கும்.
ஜிப்மரில் கடந்த 2016ம் ஆண்டு இதேபோன்று இருவேளையாக எம்.பி.பி.எஸ்., நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒரே வேளையாக நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே நீட் பி.ஜி., நுழைவு தேர்வினை ஒரே வேளையாக நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.