தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலையில் முதுகலை சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி பல்கலையில் முதுகலை சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி பல்கலையில் முதுகலை சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மே 22, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நடப்பு கல்வியாண்டில் நடத்தப்பட்ட கியூட்–பி.ஜி., பொது நுழைவுத்தேர்வு எழுதியுள்ள மற்றும் பல்கலை நிர்ணயித்துள்ள தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் பல்கலையின் அதிகாரப்பூர்வ சேர்க்கை இணையதளமான https://admissions.pondiuni.edu.in/admissions/index.php என்ற முகவரி வாயிலாக ஆன்லைனில் மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக 250 ரூபாயும், கூடுதல் பாடப்பிரிவு ஒவ்வொன்றிற்கும் தலா 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி.., மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 150 ரூபாயாகவும், கூடுதல் பாடப்பிரிவிற்கு 50 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலின பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. படிப்புகளுக்கான விரிவான தகுதி வரம்புகள் மற்றும் கியூட் தேர்வுத்தாள் குறித்த விவரங்களை மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு  மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 11ம் தேதிவரை சமர்ப்பிக்கலாம். கூடுதல்  தகவல்களுக்கு மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிடலாம் என, பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us