/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
1,668 ஐ.டி.ஐ.,சீட்டுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
/
1,668 ஐ.டி.ஐ.,சீட்டுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
1,668 ஐ.டி.ஐ.,சீட்டுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
1,668 ஐ.டி.ஐ.,சீட்டுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2024 05:27 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில் உள்ள 1,668 சீட்டுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகம் மூலம் ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி பிரிவுகளில் ஐ.டி.ஐ., மூலம் பயிற்சிகள் வழங்கப் படுகிறது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு என்.சி.வி.டி., மற்றும் எஸ்.டி.வி.டி., பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து படிக்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் இன்று 3ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.centacpuducherry.in அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் இல்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிரமம் இருப்பின் மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று கட்டணம் ஏதுமின்றி உதவி மையம் மூலமாக இம்மாதம் 30ம் தேதி வரை இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
அரசு ஐ.டி.ஐ., சீட்டுகள் எவ்வளவு
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில்-376 சீட்டுகள், வம்பாகீரப்பாளையம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம்-136, நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்-128, வில்லியனுார் அரசு தொழிற்பயிற்சி-44, பாகூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்-44, காரைக்கால் டி.ஆர் பட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம்-308, காரைக்கால் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம்-156, மாகி ராஜிவ்காந்தி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம்-44, ஏனாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு தொழிற்பயிற்சி நிலையம்-108 என, மொத்தம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1,340 சீட்டுகள் உள்ளன.
தனியார் கல்லுாரி சீட்டுகள்
ஐ.டி.ஐ.,படிப்புகளில் தனியார் கல்லுாரிகளை பொருத்தவரை திருக்கனுார் இந்திரா காந்தி தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில்-40 சீட்டுகள், உருளையன்பேட்டை பாண்டி தனியார் தொழிற்பயிற்சி நிலையம்-60, உருளையன்பேட்டை ராஜிவ் மெமோரியல் தொழிற்பயிற்சி நிலையம்-20, தேங்காய்திட்டு வொர்த் தொழிற்பயிற்சி நிலையத்தில்-20, காரைக்கால் அம்பகரத்துார் திருமலையான் தொழிற்பயிற்சி நிலையத்தில்-168, என, மொத்தம் 338 சீட்டுகள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில் மாநிலத்தில் 1,668 ஐ.டி.ஐ., சீட்டுகள் உள்ளன.