தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரோவில்லில் இணைய வழி பண பரிவர்த்தனை பயிற்சி

ஆரோவில்லில் இணைய வழி பண பரிவர்த்தனை பயிற்சி

ஆரோவில்லில் இணைய வழி பண பரிவர்த்தனை பயிற்சி


ADDED : ஜூன் 11, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: ஆரோவில்லில் வணிக மற்றும் சேவைப்பிரிவு நிர்வாகிகளுக்கு மின்னணு சாதனங்கள் மற்றும் இணைய வழியில் பணம் பரிவத்தனைகளை கையாளுதல் குறித்த பயிற்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி முன்னெடுப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரோவில்லின் நிர்வாக செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், நவீன நிதி தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகிறது.

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளை திறம்பட கையாள்வது குறித்து ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்து வணிக மற்றும் சேவைப் பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்களுக்கான கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் நடந்தது.

ஆரோவில் அறக்கட்டளை நிதி மற்றும் சொத்து மேலாண்மைக் குழுவால் நடத்தப்பட்ட பயிற்சியில், 100க்கும் மேற்பட்ட ஆரோவில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், கணக்காளர்கள் பங்கேற்றனர்.

ஆரோவில் அறக்கட்டளை கணக்காளர்கள் மற்றும் கணக்குக் குழுவினர் தினசரி நிதி செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு, புதிய மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us