/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நில அளவை மற்றும் பதிவேடுகள் ஆன்லைன் சேவை தடைபடும்
/
நில அளவை மற்றும் பதிவேடுகள் ஆன்லைன் சேவை தடைபடும்
ADDED : ஆக 03, 2024 04:37 AM
புதுச்சேரி : நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்குனரக ஆன்லைன் சேவை தற்காலிகமாக தடைபடும்.
புதுச்சேரி அரசு நிலஅளவை மற்றும் பதிவேடுகள் இயக்குனரகம் இயக்குனர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்குனரகம் ஆன்லைன் மூலம் பட்டா பிரதிகள், தீர்வு நகல்கள் மற்றும் எப்.எம்.பி., வரைபடங்களை பொது பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது.
வரவிருக்கும் காலங்களில் சிறந்த சேவையை வழங்க, மாநில தரவு மையத்திலிருந்து தேசிய கிளவுட் சேவையகத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த இடம் பெயர்வு செயல்பாட்டின்போது, 'நிலமகள்' இணையதளம் மற்றும் பொது சேவை மையத்தில் இருந்து இந்த இயக்குனரகம் வழங்கும் சேவைகள் நேற்று (2ம் தேதி) மாலை 6:00 மணி முதல் வரும் 5ம் தேதி மாலை 6:00 மணி வரை தடைபடும்.
மேலும், பதிவுத்துறையால் ஜி.எல்.ஆர் மதிப்பை பெற முடியாது என்பதால் மேலே குறிப்பிட்ட காலப்பகுதியில் பத்திரப்பதிவு சேவையும் தடைபடும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.