/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, காரைக்காலில் ஒரு அரசு பள்ளி மட்டுமே முழு தேர்ச்சி
/
புதுச்சேரி, காரைக்காலில் ஒரு அரசு பள்ளி மட்டுமே முழு தேர்ச்சி
புதுச்சேரி, காரைக்காலில் ஒரு அரசு பள்ளி மட்டுமே முழு தேர்ச்சி
புதுச்சேரி, காரைக்காலில் ஒரு அரசு பள்ளி மட்டுமே முழு தேர்ச்சி
ADDED : மே 07, 2024 05:37 AM
புதுச்சேரி : பிளஸ் 2 தேர்வு முடிவில், ஒட்டுமொத்த புதுச்சேரியில் ஒரே ஒரு அரசு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 100 தனியார் பள்ளிகளும், 55 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்விக்காக மாநில அரசு அதிக அளவில் நிதி செலவிடுகிறது.
ஆசிரியர்களுக்கு 7 வது ஊதிய குழு சம்பளம், அலவன்ஸ்கள் என அனைத்தையும் கொடுக்கிறது.
மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டுகள், எழுது பொருட்கள், லேப்டாப், சைக்கிள், சீருடை, மதிய உணவு, காலை மாலை சிற்றுண்டி என ஏராளமான இலவசங்களை வாரி இறைக்கிறது.
ஆனால், மாணவர்களின் கல்வி தரம் மற்றும் தேர்ச்சி விழுக்காடு ஒவ்வொரு ஆண்டும் சாராசரியான அளவிலே உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், புதுச்சேரி காரைக்காலில் உள்ள 100 தனியார் பள்ளிகளில் 54 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 55 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு பள்ளியான மடுகரை அரசு மேல்நிலைப் பள்ளி மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்திற்கும், நுாறு சதவீத தேர்ச்சி பெறாததிற்கு, 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்தது, மாணவர்களை அடிக்க கூடாது என கட்டுப்பாடுகள் விதித்து வழக்கமான காரணங்களை தற்போதும் தெரிவித்துள்ளனர்.